Trending News

புதிய முதலீட்டாளர்கள் 2000 பேரை முதலீட்டுத் துறையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

(UTV|COLOMBO) இரண்டாயிரம் புதிய முதலீட்டாளர்களை அடுத்த வருடம் முதலீட்டுத் துறையில் இணைத்துக் கொள்வது இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நோக்கமாகும் என பிரதேச அபிவிருத்திப் பணிப்பாளர் அனோமா கரன்லியத்த தெரிவித்துள்ளார்.

அதற்காக அவர்களை அறிந்து கொள்வதற்கான கருத்தரங்குகள் பிரதேச மட்டங்களில் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 7 இடங்களில் இவ்வாறான கருத்தரங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் எட்டாவது கருத்தரங்கு இன்று இரத்தினபுரி புதிய நகர சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

2020 ஆம் ஆண்டளவில் பொருள் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருமானத்தை 22 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பது இதன் நோக்கமாகும் எனவும் அனோமா கரன்லியத்த மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

Related posts

இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற அமர்வுகளை அதிகளவில் ஒத்திவைத்த ஜனாதிபதி

Mohamed Dilsad

Nate Diaz provisionally suspended for ‘missing 3 drug tests’

Mohamed Dilsad

Match-Box Manufacturing Workers Staged a Protest March in Kandy

Mohamed Dilsad

Leave a Comment