Trending News

தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதி

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு விசேட பொருளாதார பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நேற்றைய தினம் (07) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதமர் இந்த இழப்பீட்டை வழங்குவதற்hக பிரதமர், தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் இந்த விசேட பொருளாதார பொதி முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கமைய காயமடைந்தவர்கள், நீண்டகால அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படவேண்டிய நஷ்டஈடு தொடர்பில் தீர்மானிப்பதற்கு விசேட அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பட்டுள்ளது. இந்த தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை மற்றும் அதனுடன் இணைந்த துறைகளை மீளக்கட்டியெழுப்புவதற்கான நிவாரணங்கள் நிதியமைச்சின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படுவதாகவும் இது தொடர்பான சுற்றுநிருபம் மத்திய வங்கியின் ஆளுநர் ஊடாக சகல வங்கிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related posts

රිශාඩ් ගැන චෝදනා නැහැ – අගමැති

Mohamed Dilsad

ரிக்கி பொன்டிங் அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்

Mohamed Dilsad

Chinese ship forces US destroyer off course

Mohamed Dilsad

Leave a Comment