Trending News

பாராளுமன்ற தெரிவுக்குழுவை இரத்து செய்யும் வரை அமைச்சரவை கூட்டத்திலும் தான் பங்கேற்கப் போவதில்லை

(UTVNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தினால் இனிமேல் அமைச்சரவை கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று(07) இரவு 7.30 அளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இது தொடர்பில் தெரிவிக்கையில்;

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான 05 வழங்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டுவரும் பின்னணியில் தெரிவுக்குழுவொன்றினை நியமித்து விசாரணை செய்தல் உயர் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என சட்டமா அதிபர் தனக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும், ஜனாதிபதி என்ற வகையில் தான் அதனை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஒருவரினால் சமர்ப்பிக்கப்படும் அத்தகைய கடித ஆவணங்கள் பாராளுமன்ற அமர்வின் தொடக்கத்திலேயே சம்பிரதாயபூர்வமாக சபாநாயகரினால் முன்வைக்கப்படுகின்ற போதிலும் சபாநாயகர் இவ்விடயம் குறித்து பாராளுமன்றத்தில் எதுவித கருத்துக்களையும் வெளியிடாமை தொடர்பில் தான் வருத்தமடைவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவை ரத்து செய்யும்வரை இனிமேல் எந்தவொரு அரச நிகழ்வுகளிலும் மற்றும் அமைச்சரவை கூட்டத்திலும் தான் பங்கேற்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts

பலத்த காற்றுடன் கூடிய மழை – மீனவர்களுக்கு எச்சரிக்கை

Mohamed Dilsad

Sri Lanka, Gujarat to enhance bilateral trade

Mohamed Dilsad

Nalaka De Silva further remanded

Mohamed Dilsad

Leave a Comment