Trending News

இன்றைய காலநிலை

(UTV|COLOMBO)  நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது: மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

களுத்துறை, காலி, மாத்தறை, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்திலும் பொத்துவில் பிரதேசத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

04ம் திகதி கொழும்பில் விஷேட போக்குவரத்து திட்டம்

Mohamed Dilsad

“No need for a new Constitution,” Chief Prelates decides

Mohamed Dilsad

එක් අපේක්ෂකයෙක්ටනම් කතිරය විතරයි

Editor O

Leave a Comment