Trending News

புதிய Huawei கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக் செயலி நீக்கம்?

Huawei புதிய கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக் ​செயலியை உள்ளடக்காதிருக்க பேஸ்புக் நிறுவனம் தயாராகியுள்ளது.அமெரிக்க அரசாங்கத்தினால் Huawei நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து, பேஸ்புக் நிறுவனம் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளது.

தற்போது Huawei தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் பேஸ்புக் செயலிக்கு பாதிப்புகள் இல்லை எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பேஸ்புக் செயலியை தற்காலிகமாக பயன்டுத்துவதற்கும் வசதிகளுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், புதிதாக வரும் Huawei கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக், வட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் உள்ளடக்கப்படாது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், Google Play Store ஊடாக குறித்த அப்களை தரவிறக்கம் செய்ய முடியும்.

 

 

 

 

Related posts

Japanese cult leader Shoko Asahara executed

Mohamed Dilsad

பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல்

Mohamed Dilsad

ICC decides to establish a permanent office in Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment