Trending News

மழையுடனான வானிலை

(UTV|COLOMBO) மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும்.

பதுளை, அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சிறிதளவான மழை பெய்யக் கூடும்.

நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

PAFFREL says 50 % average voter turnout as at noon

Mohamed Dilsad

PMB commences purchasing of Maha harvest

Mohamed Dilsad

வெற்றிலைப் பொதியொன்றின் விலை அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment