Trending News

இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத்திட்டம்

(UTV|COLOMBO) இன்று(12) முதல் டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதால் நாட்டின் 5 மாவட்டங்களில் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் காலி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

டெங்கு குடம்பிகள் பரவும் வகையிலான சுற்றுச்சூழலை வைத்திருப்பவர்கள் சுற்றுச்சூழலைத் துப்புரவுசெய்து அது தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

 

 

Related posts

Presidential commission investigating the Bond issue to commence analysis of evidence

Mohamed Dilsad

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல இருந்த 12 பேர் கைது

Mohamed Dilsad

அனுஷ்காவுடன் இருக்கும் இந்த ஆண் யார்?

Mohamed Dilsad

Leave a Comment