Trending News

பொசொன் வைபவத்தை முன்னிட்டு இன்று முதல் விஷேட போக்குவரத்து சேவைகள்

(UTV|COLOMBO) பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் கண்காணிப்பின் கீழ் இலங்கை போக்குவரத்து சபை ரயில்வே திணைக்களம் பொது மக்கள் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றின் பங்களிப்புடன் இதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேற்படி இன்று 14 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி அதிகாலை வரையில் ஒன்றிணைந்த சேவையாக இது நடைமுறைப்படுத்தவுள்ளது.இதற்கமைவாக இலங்கை போக்குவரத்து சபை அன்றைய தினத்தில் ரஜரட்ட, கொழும்பு, கண்டி, கம்பஹா, வடமேல் மாகாணம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் 600 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த பஸ்களுக்கு மேலதிகமாக எந்த சந்தர்ப்பத்திலும் சேவையில் ஈடுபடுத்தக் கூடிய வகையில் மேலதிக பஸ்களையும் இலங்கை போக்குவரத்து சபை தயார் நிலையில் வைத்திருப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதே வேளை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 14,15, 16,17,18 ஆம் திகதி வரையிலும் விஷேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. இதே போன்று எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் அநுராதபுரத்தில் இருந்து 18 ஆம் திகதி வரையில் விஷேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

Related posts

Postal voting from tomorrow to Nov. 7

Mohamed Dilsad

மர முந்திரிகை அறுவடையில் வீழ்ச்சி

Mohamed Dilsad

இலங்கையில் பேஸ்புக் தடை?-அதிர்ச்சியில் இளைஞர், யுவதிகள்

Mohamed Dilsad

Leave a Comment