Trending News

பிரியங்கா சோப்ரா மனிதாபிமான விருதுக்கு தெரிவு

(UTVNEWS | COLOMBO) – பிரியங்கா சோப்ரா 2006-ம் ஆண்டிலிருந்து ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். யுனிசெஃப் அமைப்பின் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக பிரியங்கா சோப்ரா பணியாற்றினார். சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பெண்கள் உரிமை உள்ளிட்ட விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். இப்போது யுனிசெஃப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருதுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்படுள்ளார். இந்த விருது வழங்கும் விழா டிசம்பர் 3-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.

குறித்த விருதுக்கு தேர்வானது தொடர்பாக பிரியங்கா சோப்ரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். டானி கே மனிதாபிமான விருது வழங்கி கவுரவித்த யுனிசெஃப் அமைப்புக்கு மிக்க நன்றி. யுனிசெஃப்பின் சார்பாக குழந்தைகளுக்கு நான் செய்யும் சேவை எனக்கு எல்லாவற்றையும் விட முக்கியமானது. ஒவ்வொரு குழந்தையின் அமைதியான எதிர்காலம், சுதந்திரம் மற்றும் கல்வி உரிமைக்காக (இந்த விருது போய் சேரட்டும்) எனப் பதிவிட்டுள்ளார்.

Related posts

தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும்

Mohamed Dilsad

චෝදනාවලට පිළිතුරු දෙන තෙවරප්පෙරුම

Mohamed Dilsad

57 Persons remanded over Thambuttegama protest

Mohamed Dilsad

Leave a Comment