Trending News

வட மாகாணத்தில் வறட்சி காரணமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

(UTV|COLOMBO) 1,90,244 பேர் வட மாகாணத்தில் நிலவும் வறட்சி காரணமாக, பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் சுமார் 21000 குடும்பங்களும் மன்னாரில் சுமார் 18000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் சுமார் 36000 குடும்பங்களைச் சேர்ந்த 1,52,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4,47164 வரை அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஆனையறைவு கடல் நீரேரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

விமான நிலையத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு

Mohamed Dilsad

සමාජ මාධ්‍ය ක්‍රියාකාරික අශේන් සේනාරත්න එරෙහිව අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවෙන් විමර්ශනයක්

Editor O

පොලිස් නිලධාරීන්ට වෙඩි තැබීමේ පුහුණුවක්

Editor O

Leave a Comment