Trending News

சப்ரகமுவ மாகாணத்தில் 130 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

(UTV|COLOMBO) மாகாண சபை பாடசாலைகளுக்கு 130 ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட இருப்பதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மகிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பான நிகழ்வு இன்று பிற்பகல் 1.30 இற்கு மாகாண ஆளுநர் தம்ம திஸ்ஸாநாயக்க தலைமையில் மாகாணசபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்துக்குட்பட்ட இரத்தினபுரி, கேகாலை ஆகிய 2 மாவட்டங்களைச் சேர்ந்த இரத்தினபுரி, பலாங்கொடை, எம்பிலிப்பிட்டிய, நிவித்திகல, கேகாலை, மாவனெல்லை, தெஹியோவிட்ட ஆகிய கல்வி வலயங்களில் உட்பட்ட பாடசாலைகளுக்கே இவர்கள் நியமிக்கபடவுள்ளன.

போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 450 பேர் இதற்கு முன்னர் சப்ரகமுவ மாகாண ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இதனடிப்படையிலேயே இம்முறை 2ஆம் கட்ட நியமனம் வழங்கப்படவுள்ளதாக செயலாளர் தெரிவித்தார். சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் சேவையில் வருடாந்தம் 200 தொடக்கம் 300இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் ஆசிரியர்கள் ஓய்வுப்பெறுகின்றனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

Related posts

COPE to summon Central Bank and Finance Ministry officials

Mohamed Dilsad

ஜகத் விஜேவீர மற்றும் தாரக்க செனவிரத்னவுக்கு பிணை

Mohamed Dilsad

Tanzania ferry disaster death toll doubles

Mohamed Dilsad

Leave a Comment