சீன ஜனாதிபதி இன்றைய தினம் வடகொரியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.
சீனாவின் ஜனாதிபதி சி ஜின்பிங் மற்றும் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்க்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2005ஆம் ஆண்டுக்கு பின்னர் சீனாவின் ஜனாதிபதி ஒருவர் வட கொரியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும் மேற்படி இரண்டு பேரும் சீனாவில் நான்கு தடவைகள் ஏற்கனவே சந்தித்திருக்கின்றனர்.
இன்றைய சந்திப்பின் போது வடகொரியாவின் அணு வேலைத் திட்டம் மற்றும் பொருளாதார விடயங்கள் சம்பந்தமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.