Trending News

பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற பொலிஸ் ‘ரோபோ’

(UTV|AMERICA) அமெரிக்காவில் பொது இடங்களில் குற்றச் செயல்கள் நடப்பதை கண்காணிக்கவும், தடுக்கவும் பொலிசார்  தொடர் ரோந்துப் பணியில் ஈடுவது வழக்கம். அண்மை காலமாக இந்த பணியில் பொலிசாருக்கு பதில் புதிய, புதிய தொழில்நுட்பங்களை அமெரிக்கா பயன்படுத்த தொடங்கி உள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹண்டிங்டன் பூங்காவில், பொதுமக்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதை கண்காணிக்கவும், தரவுகளை சேகரித்து பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை எடுக்கவும், ‘ஹெச்பி ரோபோகாப்’ என்கிற ரோபோ பணியமர்த்தப்பட்டு உள்ளது.

இது 4 புறமும் உயர் தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டு சுமார் 5-6 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பூங்காவின் நடைபாதையில் மக்களோடு மக்களாக சுற்றி ரோந்து பணியில் ஈடுபடும் இந்த ரோபோ “கொஞ்சம் வழிவிடுங்கள்“ மற்றும் “இன்றைய தினம் நல்ல நாளாக அமையட்டும்“ போன்ற வார்த்தைகளை கூறி பூங்காவுக்கு வருவோரை கவர்ந்து வருகிறது.

இந்த பொலிஸ் ரோபோ பொதுமக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

 

 

Related posts

நாடு திரும்பிய ஜனாதிபதி

Mohamed Dilsad

6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

Mohamed Dilsad

Ten arrested over treasure hunt in Monaragala

Mohamed Dilsad

Leave a Comment