Trending News

புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…

(UTV|COLOMBO) நேற்று நள்ளிரவு முதல் புகையிரத பணியாளர்களது தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வேதனப்பிரச்சினையை தீர்க்க அமைச்சரவை தீர்மானித்திருந்த போதும், அதன் அடிப்படையில் நிதி அமைச்சு செயற்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து நிதி அமைச்சருடன், புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதும், அது தோல்வியில் நிறைவடைந்தது.

இதனை அடுத்து நேற்று நள்ளிரவு முதல் 2 தினங்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

மேற்படி நேற்று இரவு 7.00 மணி அளவிலேயே பல புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டன.

அதானல் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களில் இருந்த பயணிகள் அதிருப்தியை வெளியிட்டதுடன், அங்கு பதட்டமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

 

 

 

Related posts

உடல் எடை குறைக்கும் இரண்டு சுவையான உணவு காமினேஷன்கள்

Mohamed Dilsad

IUSF students released on bail

Mohamed Dilsad

Bundesliga appoints Bibiana Steinhaus as first female referee

Mohamed Dilsad

Leave a Comment