Trending News

மழையுடன் கூடிய வானிலை சில நாட்களுக்கு தொடரும்

(UTV|COLOMBO) நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய வானிலை நிலைமையும் அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பு, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வளிமண்டலவியல் திணைக்களம்

 

 

Related posts

இலங்கை வீரர்கள் வரலாற்று சாதனை

Mohamed Dilsad

Magnitude 7.0 quake hits Papua New Guinea

Mohamed Dilsad

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக M.R.C பெர்ணான்டோ நியமனம்

Mohamed Dilsad

Leave a Comment