Trending News

அபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்

(UTV|COLOMBO) உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடந்த மே மாதம் 29ஆம் திகதி வெளியிட்ட அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தை, மீண்டும்திருத்தி வௌியிடுவதில் காலம் தாழ்த்தப்படுவதால் முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்கள் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விகரமசிங்க மற்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளளார்.

இச்சிக்கலைத் தீர்த்து வைக்க முகத்தை திறந்து முஸ்லிம்களின் கலாசார உடையில் அபாயா அணிவதையும் அனுமதித்து புதிய சுற்று நிருபத்தை விரைவில் வெளியிடுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்பதியுதீன் கடிதமொன்றை தனித்தனியாக இவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அக்கடித்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:

உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்ட அரச ஊழியர்களின் ஆடை தொடர்பிலான சுற்று நிருபத்தில் முஸ்லிம் பெண்கள் பாரம்பரியமாக அணிந்து வந்த அபாயாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அலுவலகங்களுக்குச் செல்வதில் முஸ்லிம் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். தேசிய உடை என்ற போர்வையில் பாரம்பரிய முஸ்லிம்களின் கலாசார ஆடைகள் மீது கட்டுப்பாடு விதிப்பதும், இஸ்லாமிய கலாசார விடயங்களில் தேவையற்ற நெருக்குதல்களை ஏற்படுத்துவதும் சமூகங்களுக்கிடையில் வீண் விமர்சனங்களை ஏற்படுத்துவதாகவுள்ளது.

இனங்களை மோதவிட்டு சுய இலாபங்களையும் அரசியல் முதலீடுகளயைும் அதிகரிக்கக் காத்திருக்கும் இனவாதிகளும் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தை ஒரு இனத்தின் மீதான ஒடுக்கு முறையாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

இவ்விபரீதங்களைக் கருத்தில் கொண்டு கலாசாரங்களின் நம்பிக்கைகளில் தேவையில்லாத தலையீடுகளைத் தவிர்க்கும் வகையில் புதிய சுற்று நிருபத்தை அவசரமாக வெளியிட வேண்டும்.

மேலும், பாரம்பரியமாக இலங்கை முஸ்லிம் பெண்கள் அணிந்து வந்த அபாயாவையும் அனுமதித்து புதிய சுற்று நிருபத்தை வெளியிடுவது சிறப்பாக அமையும். மேலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தால் சில அரச அதிகாரிகளினால் , அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் முஸ்லிம் பெண்கள் தேவையற்ற நெருக்கடிகளை எதிர் கொள்ள நேர்ந்தது. இதைத் தவிர்க்கும் பொருட்டு ஆடைகள் தொடர்பில் தெளிவான வரையறைகளை உள்ளடக்கி புதிய சுற்று நிருபத்தை வெளியிட வேண்டும் என்றும் பாரளுமன்ற உறுப்பினரும் அகில இங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஊடகப்பிரிவு

 

Related posts

பேஸ்புக்கில் பொய்ப் பிரச்சாரம் செய்த மாணவன் விளக்கமறியலில்

Mohamed Dilsad

නායකත්වය ගැන හෙට එජාප විශේෂ සාකච්ඡාවක්

Mohamed Dilsad

AG’s submissions before 7 Judges concludes

Mohamed Dilsad

Leave a Comment