Trending News

சவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை…

(UTV|COLOMBO) பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் எதிர்ப்புக்களையும் முன்வைத்து தன்னை குற்றவாளியாக அடையாளப்படுத்துவதற்கு எத்தகைய முயற்சிகளை முன்னெடுத்தாலும் நாட்டின் நலனுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நற்செயல்களிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

மேற்படி ஜனாதிபதி போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டையும் பிள்ளைகளையும் பாதுகாக்கும் கடமையை நிச்சயமாக நிறைவேற்றுவதாகவும் சவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் நேற்று அனுஷ்டிக்கப்படுவதுடன், அதனை முன்னிட்டு நேற்று (26) காலை கொலன்னாவ ரஜமகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

Related posts

Kelani Valley Line Train Services Delayed

Mohamed Dilsad

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் கைது

Mohamed Dilsad

வரவு செலவுத் திட்ட தயாரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment