(UTV|COLOMBO) வறட்சியான முகம்:
முகத்தில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பவர்களுக்கு எளிய வழி உள்ளது. இதற்கு கற்றாழை, கிரீன் டீ, வெள்ளரிக்காய் போன்றவற்றை முகத்தில் பயன்படுத்தலாம். இந்த குறிப்புகள் முகத்தின் வறட்சியை குறைத்து விடும்.
அழுக்குகள் கொண்ட முகம்:
வெளியில் அதிகம் சுற்றி திரியும் உங்கள் முகத்தில் பல்வேறு அழுக்குகள், கிருமிகள் குடியிருக்கும். இவை தான் முகத்தின் அழகை கெடுக்கிறது. இதனை போக்குவதற்கு அன்னாசிபழம், பப்பாளி போன்ற அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்ட பழங்கள் உதவும்.
எண்ணெய் வடிதல்:
முகத்தில் எப்போதுமே எண்ணெய் வடிந்து கொண்டே இருந்தால் அவர்களுக்கு சிறந்த தீர்வு களிமண் ஃபேஸ் மாஸ்க் தான். குறிப்பாக முல்தானி மெட்டி போன்ற முகப்பூச்சிகள் இவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதனுடன் பன்னீர் அல்லது தேன் கலந்து முகத்தில் தடவினாலே எண்ணெய் வடிதல் மற்றும் பருக்கள் இல்லாமல் இருக்கும்.
துளைகள் உள்ளதா?
முகத்தின் பல பகுதிகளில் அதிக அளவில் துளைகள் இருந்தால் அதற்கு தெர்மல் மாஸ்க் சிறந்த தீர்வு. இது முகத்தில் உள்ள துளைகளை அடைத்து முகத்தை அழகாக மாற்றி விடும். மேலும் இந்த மாஸ்க் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும் வழி செய்கிறது.