Trending News

ஒல்கொட் மாவத்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ

(UTV|COLOMBO) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒல்கொட் மாவத்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு 08.15 மணியளவில் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

அதனையடுத்து கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி தீயினால் சிறியளவிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தக நிலைய உரிமையாளரினால் தவறுதலாக இடம்பெற்ற வாயுக் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

 

 

Related posts

போதைப்பொருள் ஒழிப்பில் வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைத்துள்ளது

Mohamed Dilsad

වාහන ආනයනය පිළිබඳව ගෙන ඇති තීරණ

Editor O

நீர்த்தேக்க பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

Mohamed Dilsad

Leave a Comment