Trending News

சுவையான க்ரீன் சிக்கன் குழம்பு…

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ (நன்கு சுத்தமாக கழுவியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

தேங்காய் – 6 டேபிள் ஸ்பூன் (துருவியது)

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

புதினா – 1 கப் (நறுக்கியது)

கொத்தமல்லி – 2 கப் (நறுக்கியது)

சீரகம் – 1/2 டீஸ்பூன்

மிளகு – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

வெங்காயம் – 2 (நறுக்கியது)

சர்க்கரை – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

ஏலக்காய் – 5

வரமிளகாய் – 2

தண்ணீர் – 2 கப்

செய்முறை:

முதலில் மிக்ஸியில் தேங்காய், கொத்தமல்லி, புதினா, உப்பு, சர்க்கரை, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், பாதி வெங்காயம், பச்சை மிளகாய் மறற்ம் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, ஏலக்காய், பட்டை, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் சிக்கனை போட்டு நன்கு பிரட்டி, மசாலாவானது சிக்கனுடன் நன்கு ஒன்று சேர்ந்த பின்னர், அதில் கறிவேப்பிலை மற்றும் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு, பின் தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், கோவா க்ரீன் சிக்கன் குழம்பு தயார்!!

Related posts

ජ්‍යෙෂ්ඨ පුරවැසියන්ගේ ස්ථාවර තැන්පතු සඳහා විශේෂ පොලී අනුපාතිකයක්

Editor O

புதிய அரசியல் கட்சிகளின் பதிவுகள் மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Mohamed Dilsad

Easter Blasts in Sri Lanka: INTERPOL deploys team to Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment