Trending News

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் இன்று

(UTV|COLOMBO) – கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் இன்றாகும்.

இதன் பிரதான மாநாடு இன்று(01) பிற்பகல் கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

ஜூன் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் போதைப்பொருளுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வழிகாட்டலில் பாடசாலை பிள்ளைகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்களை இலக்காகக்கொண்டு நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதேவேளை, போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி விசேட செயலணி, தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டு சபை மற்றும் இலங்கை பொலிஸ் இணைந்து போதைப்பொருள் பாவனை பரவலடைவது குறித்து தேசிய ரீதியான ஆய்வறிக்கையொன்றை தயாரித்துள்ளதுடன், அவ்வறிக்கை இன்று(01) இடம்பெறவுள்ள மாநாட்டில் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அவர்களின் நேரடி தலையீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் 2015ஆம் ஆண்டு முதல் 2019 வரையான காலப்பகுதியில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக கைது செய்தல் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளித்தல், புனர்வாழ்வளித்தல் உள்ளிட்ட பல்வேறு வெற்றிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

China asks N Korea to stop missile tests

Mohamed Dilsad

Lebanese novelist, feminist Emily Nasrallah dies at 87

Mohamed Dilsad

England win Cricket World Cup

Mohamed Dilsad

Leave a Comment