Trending News

நுவரெலியாவில் கேபில் கார் திட்ட முறையை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) – சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக நுவரெலியாவில் கேபில் கார் திட்ட முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நுவரெலியா பிரதேசம் சுற்றுலா துறையினரை மேலும் கவரக்கூடிய வகையிலான நடவடிக்கையாக நானுஓயாவிலிருந்து சிங்கில் ட்ரீ மலை மற்றும் கிரகரி குளம் வரையில் கேபல் கார் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக வரையறுக்கப்பட்ட அவுட்டோர் இன்ஜினியரிங் லங்கா தனியார் நிறுவனம் மற்றும் அதன் வெளிநாட்டு பங்குதாரர்களான டொபெல்லெம் கேபில் கார் நிறுவனத்தினால் திட்ட ஆலோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த திட்டம் முதலீட்டு சபையின் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கை எட்டுவதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைவாக 50 மில்லியன் டொலர் முதலீட்டின் கீழ் நானுஓயா ரயில் நிலையம் நுவரெலியா குதிரை பந்தத் திடல் மற்றும் சிங்கல் ட்ரீ மலை உச்சியை கடந்த வகையில் 21 கோபுரங்களின் மேல் கட்டியெழுப்புவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் 10 நிமிடங்களில் செல்லக்கூடிய 86 சிறிய கூடங்களை கொண்டதுடன் இதில் முதல் கட்டத்தின் கீழ் 46 கூடங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சர்வதேச வெசாக் தின வைபவம் ஆரம்பம்

Mohamed Dilsad

எரிபொருள் விலைச் சூத்திரம் மாற்றம் செய்யப்படும்

Mohamed Dilsad

மாகெலிய நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல் போன மருத்துவரின் சடலம் கண்டுபிடிப்பு

Mohamed Dilsad

Leave a Comment