Trending News

சமபோஷ அனுசரணையுடன் பிராந்திய பாடசாலை மெய்வல்லுநர் விளையாட்டு போட் டிகளுக்கு வலுவூட்டல்

(UTV|COLOMBO) – நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளென்டி ஃபுட்ஸ ; நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பான சமபோஷ அனுசரணையில், 2019 பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் ஜுலை 8 ஆம் திகதி ஆரம்பமாகின்றன. ஊவா, வட மத்திய, கிழக்கு மறற்றும் வயம்ப மாகாணங்களில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.

சமபோஷ முழு அனுசரணையில், பிராந்திய கல்வி அலுவலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் இந்த விளையாட்டு போட்டிகள் நான்கு மாகாணங்களில் ஜுலை மாதம ; முழுவதிலும் வெவ்வேறாக இடம்பெறுகின்றன.

இதில் 70 க்கும் அதிகமான போட்டிகளில், நான்கு மாகாணங்களையும் சேர்ந்த 500 க்கும  அதிகமான பாடசாலைகளைச் சேர்ந்த 8000 வீர வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். வெற்றியீட்டும் பாடசாலைகள் மற்றும் வீர, வீராங்கனைகளுக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் போன்றன அன்பளிப்பாக வழங்கப்படும்.

ஊவா மாகாண விளையாட்டு போட்டிகள் இம்முறை முதன் முறையாக ஜுலை மாதம் 8 ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை பதுளை வின்சன் டயஸ் விளையாட்டரங்கில் நடைபெறுவதுடன், ஊவா மாகாண உதவி கல்விப் பணிப்பாளர் சன்ன கருணாரத்ன இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ‘1984 ஆம் ஆண்டு முதல், தேசிய விளையாட்டு போட்டிகள் இடம்பெறுகின்றன.

ஆனாலும் அடி மட்டத்திலிருந்து தேசிய மட்டத்துக்கு முன்னேற முயற்சிக்கும் பிள்ளைகளை தரமுயர்த்துவதற்கு இயலாத நிலையில், எமக்கு முழு ஆதரவையும் வழங்கி, இந்த விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு சமபோஷ முதன் முறையாக முன்வந்திருந்தது.’ என்றார்.

வட மத்திய மாகாண விளையாட்டு போட்டிகள் ஜுலை மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை அனுராதபுரம் மக்கள் விளையாட்டரங்கில் இடம்பெறும். இது தொடர்பில், வட மத்திய மாகாணத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் வை.எம்.எச .கே. அபேகோன் கருத்துத் தெரிவிக்கையில், ‘நான்கு வருடங்களாக சமபோஷ, வடமத்திய மாகாணத்தின் சிறுவர்களின் விளையாட்டு திறமைகளை மேம்படுத்துவதற்காக, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவந்திருந்ததுடன், தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு அவசியமான உதவிகளை வழங்குகின்றது. இது வடமத்திய மாகாணத்தின் ஐந்தாவது விளையாட்டு போட்டிகளாகும் முயற்சியுடன் தமது திறமைகளை வெளிப்படுத்தி முன்னேறத் துடிக்கும ; இந்த பிள்ளைகளின் வளர்ச்சிக்கு சமபோஷ தனது ஆதரவை வழங்குகின்றது.’ என்றார ;.

மூன்றாவது விளையாட்டு போட்டிகள் ஜுலை மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை வென்னப்புவ அல் பர்ட். எஃவ். பீரிஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும். வயம்ப மாகாணத்தின் துணை கல்விப் பணிப்பாளர் எச் கே. எம் ராஜதிலக இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ‘வயம்ப மாகாணத்தில் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விளையாட்டுப் போட்டிகள், பாடசாலை வீர வீராங்கனைகளின் திறமைகளை வெளிக் கொணரும் வகையில் அமைந்துள்ளது. தமது திறமைகளை மேம்படுத்தி, தம்மை சர்வதேச மட்டத்துக்கு தரமுயர்த்தி, தேசத்துக்கும் கீர்த்தி நாமத்தை பெற்றுக் கொடுப்பதற்கு சிறந்த அடித்தளமூட்டுவதாக சமபோஷ அனுசரணையில் இந்த போட்டிகள் இடம்பெறுகின்றமை அதிகம வரவேற்கத்தக்கது.’ என்றார்.

நான்காவதாக இடம்பெறும் இந்த போட்டிகள் கிழக்கு மாகாணத்தில் ஜுலை 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இடம்பெறும். கந்தளாய் லீலரத்ன விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன. கிழக்கு மாகாணத்தின் உதவி கல்விப் பணிப்பாளர் ஈ.ஜி.பி.ஐ. தர்மதிலக இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், ’30 வருட கால யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாடசாலை மட்டத்தில் விளையாட்டு போட்டிகள் கிழக்கு மாகாணத்திலும் இடம்பெறுகின்றன. இதன் முதலாவது அனுசரணையாளராக சமபோஷ இணைந்துள்ளது. கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் இந்த விளையாட்டுப் போட்டி பெரும் வளமாக அமைந்துள்ளது. இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தேசத்தின் பிள்ளைகளுக்காக தேசிய தயாரிப்பு அனுசரணை வழங்கி அவர்களின் வளர்ச்சிக்கு தமது ஆதரவை வழங்குவது மிகவும் வரவேற்கத்தக்கது.’ என்றார்.

சமபோஷ அனுசரணையில் இடம்பெறும் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் நாடு முழுவதுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது. இது தொடர்பில CBL உணவு பிரிவின் விற்பனை பொது முகாமையாளர் ஜயங்க பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், ‘ஆரோக்கியமான போஷாக்கு நிறைந்த எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கு சமபல காலை உணவு வேளையை வழங்க சமபோஷ எப்போதும் தன்னை அர்ப்பணித்துள்ளது. அதன் பிரகாரம் “Breakfast மிகவும் முக்கியம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் விழிப்புணர்வூட்டும் செயற்திட்டத்தையும் நாடு முழுவதிலும் முன்னெடுத்த வண்ணமுள்ளது. சமபோஷ என்பது சோளம், சோயா, அரிசி மற்றும் பயறு போன்ற தானியங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும சர்வதேச கீர்த்தி நாமத்தை வென்ற தயாரிப்பாகும். இதனூடாக, திறமையான விளையாட்டு வீர,வீராங்கனைகளை இனங்கண்டு, அவர்களுக்கு வலுவூட்டி, தேசத்துக்கு பெருமையை சேர்க்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதற்காக தன்னை உள்நாட்டு நிறுவனம் எனும் வகையில் முழுமையாக அர்ப்பணித்துள்ளது.’ என்றார்.

அதுபோன்று, இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை தொடர்பாக பிளென்டி ஃபுட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷம்மி கருணாரட்ன கருத்துத் தெரிவிக்கையில், ‘விளையாட்டின் மற்றும் வீர வீராங்கனைகளின் வளர்ச்சிக்காக போஷாக்கு மற்றும சக்தியை பெற்றுக்கொடுப்பதுடன், அர்ப்பணிப்பு, பொறுமை, தன்னம்பிககை, ஒழுக்கம் மற்றும் இதர பண்புகள் மிகவும் முக்கியமானவையாக அமைந்துள்ளன. இதனூடாக, தன்னம்பிக்கை வாயந்த தலைவர்கள் உருவாக்கப் படுகின்றனர். 10 வருடங்களாக முன்னெடுக்கும் பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டிகள், மலையக சிறார்கள் மற்றும கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள், இராணுவ மெய்வல்லுநர் போட்டிகள் போன்ற பலவற்றுக்கு அனுசரணை வழங்குவதனூடாக, இந்நாட்டின் விளையாட்டுத்துறைக்கு வலுவூட்டி, சர்வதேச தரம் வாய்ந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கும் முயற்சியை முன்னெடுத்த வண்ணமுள்ளோம்.’ என்றார்.

Related posts

WWE Evolution 2018 Results: Ronda Rousey, Becky Lynch retain their titles

Mohamed Dilsad

Nearly 200kg of Cannabis meant to be smuggled to Sri Lanka seized

Mohamed Dilsad

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் தெரிவு

Mohamed Dilsad

Leave a Comment