Trending News

மஹாநாம மற்றும் திஸாநாயக்க ஆகியோர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) – ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ. திஸாநாயக்க ஆகியோர் குற்றப்பத்திரிக்கை வழங்கியதன் பின்னர் பிணையில் விடுதலை செய்ய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதிவாதி ஒருவருக்கு 05 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் 03 இன் அடிப்படையில் பிரதிவாதிகளுக்கு பிணை வழங்க உத்தரவிடப்பட்டது.

அத்துடன் பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதித்தும் அவர்களது கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 02 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே. மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திசாநாயக்க ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Related posts

சீன சிகரெட்டுக்கள் குறித்து மங்கள விளக்கம்

Mohamed Dilsad

வாகன விபத்தில் மூவர் மரணம்

Mohamed Dilsad

Paul Farbrace turns down offer to become Bangladesh ‘Head Coach’

Mohamed Dilsad

Leave a Comment