Trending News

புலிகள் மீதான தடையை நீக்குமாறு முன்னாள் போராளிகள் கோரிக்கை

(UTV|COLOMBO) அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை யாழில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாறிவரும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் நிலைமாற்றங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான க.துளசி பிபிசிக்கு தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம், இலங்கையின் தென் பகுதியில் அரசியல் காய்நகர்த்தல்கள், அரசியலமைப்பின் பொறிமுறை மற்றும் தமிழர்களுக்கான சாத்தியப்பாடான தீர்வுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

Related posts

Attorney General files indictment in Rathupaswala shooting case

Mohamed Dilsad

காலநிலை

Mohamed Dilsad

SLFP decides not to support the Government

Mohamed Dilsad

Leave a Comment