Trending News

களுத்துறை மாவட்டத்தில் 10 மணி நேர நீர்வெட்டு

 

(UTV|COLOMBO)-  இன்று (09) முற்பகல் 10.00 மணியிலிருந்து களுத்துறை மாவட்டத்தின், 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, வாஸ்கடுவ, வாத்துல, பொத்துப்பிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்தை மற்றும் நாகொட ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

இதேவேளை ஹோகந்தர பிரதேசத்தில் நாளை காலை 09 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

குறித்த காலப்பகுதியில் கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவலை மா நகர சபைக்கு உட்பட்ட பகுதி, மகரகம, பொரலெஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பகுதி, கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

எனவே குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்குத் தேவையான நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ள சபை, இது தொடர்பில் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துவதாகவும் அறிவித்துள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிப்பு

Mohamed Dilsad

அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

Mohamed Dilsad

President to visit the Republic of Korea next week

Mohamed Dilsad

Leave a Comment