Trending News

தோல்வியின் பின்னர் டோனி ஓய்வு குறித்து கோலி கருத்து

 

(UTV|COLOMBO)-இந்திய அணியின் நட்சத்திர வீரரான எம்.எஸ் டோனி ஓய்வு குறித்து எங்களிடம் ஏதும் கூறவில்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ஓட்டங்களை பெற முடியாமல் இந்தியா 221 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்தது. டோனி கடைசி வரை போராடினார். ஆனால் 72 பந்தில் 50 ஓட்டங்களை பெற்றநிலையில் ரன்அவுட் ஆனார்.

ஜடேஜா ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய போது, டோனி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரன்அவுட்டாகி வெளியேறும்போது மிகுந்த மன உளைச்சலுடன் வெளியேறினார். இதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.

Related posts

கடும் வெப்பமுடனான வானிலை…

Mohamed Dilsad

RUGBY- Trinity downs S. Thomas to regain title

Mohamed Dilsad

UTV தொலைக்காட்சியின் புதிய மொபைல் செயலி அறிமுகம்

Mohamed Dilsad

Leave a Comment