Trending News

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம்

(UTV|COLOMBO)- சசிகலா மற்றும் இளவரசி ஆயோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அவருடைய உறவினர் இளவரசி ஆகியோர் போயஸ்கார்டக் இல்லத்தில் வசித்து வந்தனர்.

எனவே ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்ல முகவரியிலேயே சசிகலா, இளவரசி ஆகியோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர். 2016 சட்டசபை தேர்தலின்போது ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடிக்கு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இருவரும் சென்று வாக்களித்தனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்தது. இதில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து 2017 பெப்ரவரி மாதம் முதல் இருவரும் பெங்களூர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது சசிகலா, இளவரசி ஆகியோர் போயஸ் கார்டன் இல்லத்தில் இல்லை. எனவே, இருவரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு நினைவகமாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

Related posts

Easter Blasts in Sri Lanka: Trump offers “Heartfelt condolences”

Mohamed Dilsad

பொது மக்களுக்கு எச்சரிக்கை!!!-டெங்கு நோய் அதிகரிக்கும் சாத்தியம்

Mohamed Dilsad

‘டெக்னோ ஸ்ரீ லங்கா 2019’ அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

Mohamed Dilsad

Leave a Comment