Trending News

ரிஷாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதனை தோற்கடிப்போம் – முஜிபுர் ரஹ்மான்

(UTV|COLOMBO)- முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் எவ்வாறு அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதோ, அவ்வாறே ரிஷாட் பதிவூதினுக்கு எதிரான பிரேரணையையும் தோற்கடிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மட்டக்குளி சேர். ரசிக்பரித் முஸ்லிம் மகளிர் கல்லூரின் அதிபர் பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர் ஊடகவியளார்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியக் கட்சி கூட்டத்தின் போது தொடர்ச்சியாக ரிஷாத் பதியுதீன் உட்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தமது அமைச்சு பொறுப்புக்களை எடுக்குமாறு கூறப்பட்டுவந்தது.

மேலும் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் எவ்வித உண்மையும் இல்லை. என பொலிமா அதிபர் சபாநாயகருக்கு வழங்கியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே முன்னாள் அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தாக்குதல் சம்வத்துடன் தொடர்பு இல்லை. என்பதால் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

பயிற்சி ஆலோசகரானார் திலான் சமரவீர

Mohamed Dilsad

Island-wide curfew lifted [UPDATE]

Mohamed Dilsad

Colin Farrell Joins Guy Ritchie’s “Toff Guys”

Mohamed Dilsad

Leave a Comment