Trending News

பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் தபாலில்

(UTVNEWS | COLOMBO) –  பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் இன்று தபாலில் சேர்க்கப்படும் என்றும் இது 31 ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதுடன் பரீட்சை அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் 2675 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறுவதுடன் 315 இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

பழைய மற்றும் புதிய சிபார்சுகளின் அடிப்படையில் பரீட்சை இடம்பெறுவதுடன், இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 30 ஆயிரத்து 704 பேர் தோற்றவுள்ளனர்.

Related posts

An epoch meeting between Dr. Mahathir and President Sirisena

Mohamed Dilsad

All schools in Matara, Galle remain closed for another 2-days

Mohamed Dilsad

சட்டவிரோதமாக நியுசிலாந்து செல்ல முற்பட்டவர்கள் நீர்கொழும்பில் கைது

Mohamed Dilsad

Leave a Comment