Trending News

நியூசிலாந்து தோற்றது வருத்ததை ஏற்படுத்தியுள்ளது: ஸ்டோக்ஸின் தந்தை (வெளியானது உண்மை)

(UTVNEWS | COLOMBO) – உலகக்கிண்ண தொடரில் பென் ஸ்டோக்ஸ் தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் நிலையில் அவர் நியூசிலாந்தில் பிறந்தவர்.

அவரை வைத்தே இங்கிலாந்து ஜெயித்துவிட்டது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கும் அதிர்ஷ்டமும், சகலதுறை வீரர் பென் ஸ்டோக்சும் தான் காரணம்.

தோல்வியின் விழும்பில் இருந்த இங்கிலாந்து அணியை போட்டி சமநிலைக்கு கொண்டு சென்று, அதன் பின் சூப்பர் ஓவரில் அதிரடியாக விளையாடி 15 ஓட்டங்கள் பெற்று, இங்கிலாந்து மக்கள் மனதில் ஹீரோவாக மாறிவிட்டார்.

அவருக்கு இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக ஆட்டநாயகன் விருதும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமான பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் பிறந்தவர்.இவரின் தந்தை கியர்ட் ரக்பி விளையாட்டின் பயிற்சியாளர் என்பதால், இங்கிலாந்தின் கம்பீரியாவிற்கு பயிற்சியாளராக நியூசிலாந்தில் இருந்து இங்கிலாந்திற்கு வந்துள்ளார்.

அப்போது ஸ்டோக்ஸிற்கு 12ஆவது வயது. இங்கிலாந்து வந்த ஸ்டோக்ஸ் இங்கே தங்கிவிட, பெற்றோர் நியூசிலாந்திற்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் தன்னுடைய திறமையினால் இங்கிலாந்து அணிக்கு விளையாடி தற்போது ஹீரோவாக மாறியுள்ளார்.

உலகக்கிண்ண இறுதிப் போட்டி குறித்து பென்ஸ்டோக்சின் தந்தை கூறுகையில், நான் நியூசிலாந்து அணிக்கே சப்போர்ட் செய்தேன், ஆனால் தோற்றதை வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அந்தணியினர் சிறப்பாக விளையாடினர். ஆனால் நான் நியூசிலாந்து ரசிகன் தான் என்று கூறியுள்ளார்.

Related posts

பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது

Mohamed Dilsad

නිෂ්පාදනය ඉහළදමා, අපනයනය වැඩි කර, ශක්තිමත් ආර්ථිකයක් ඇති කරනවා – ජනාධිපති අපේක්ෂක සජිත් ප්‍රේමදාස

Editor O

Prime Minister arrives at Bond Commission

Mohamed Dilsad

Leave a Comment