Trending News

மாணவிகள் தலை மூடகூடாது – அதுரலியே ரதன தேரர்

(UTVNEWS | COLOMBO) – ஒரே வகையான சீருடைகள் வழங்கப்பட வேண்டும். தலை மற்றும் முகத்தை மூடகூடாது. அவ்வாறு மூடிக்கொண்டு வர வேண்டுமாயின் மத்திய கிழக்கிற்கு அனுப்ப வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.

அநுராதப்புரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அனைத்து பாடசாலைகளையும் கலவன் பாடசாலைளாக மாற்ற வேண்டும். ஒரே வகையான சீருடைகள் வழங்கப்பட வேண்டும். இலவச கல்வியின் தந்தை கன்னங்கர கூறியது போன்று, மத்திய கல்லூரிகள், மகா வித்தியாலயங்கள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளுக்கு மாணவர்களை கட்டாயம் அனுப்புங்கள். அதன் பின்னர் உயர் தரப்பரீட்சையில் தேர்ச்சி பெற்ற அனைவரும் இராணுவத்திற்கு சென்று பயிற்சி பெறுங்கள். அப்போது நாம் ஒரே இனமாகின்றோம். அனைவரும் இலங்கையின் வரலாற்றை ஆழமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்கள் தமிழை கற்றுக்கொள்வதில் பிரச்சினையில்லை. ஏனைய பகுதிகளை சார்ந்தவர்கள் சிங்களத்தில் வியாபாரத்தில் ஈடுப்பட முடியுமாயின் ஏன் அவர்களால் சிங்கள மொழியை பேச இயலாது.

ஆகவே ஒரு தேசிய கல்வி கொள்கைக்குள் அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related posts

‘Utthara Devi’ to commence inaugural travel next week

Mohamed Dilsad

Light showers expected in several areas today

Mohamed Dilsad

Naomi Campbell does not care about being relevant

Mohamed Dilsad

Leave a Comment