Trending News

கன்னியாவில், விகாரை விவாகாரம் – ஜனாதிபதி மனோகணேசனுக்கு கூறியது என்ன?

(UTVNEWS | COLOMBO) -திருகோணமலை கன்னியாவில், விகாரை நிர்மாணிக்குமாறு தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு கடிதம் எழுதும்படி தனது இணைப்பு செயலாளருக்கு தான் கூறவில்லை என ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இது பற்றி தான் விசாரிப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் தமிழ் எம்.பிகளின் தூதுக்குழுவை சந்திக்க தன்னிடம் அவர் உடன்பட்டார். இதற்கான திகதி விரைவில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் இவ்விவகாரம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவித விகாரை கட்டுமான பணிக்கும் கன்னியாவில் இடம் கொடுக்க வேண்டாம் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஸ்பகுமாரவுடன் தொடர்பு கொண்டு தான் கூறியதாகவும் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

Mohamed Dilsad

நிகாப் மற்றும் புர்கா பயன்படுத்த முடியுமா? முடியாதா?

Mohamed Dilsad

Bangladesh dressing room damaged following Sri Lanka match

Mohamed Dilsad

Leave a Comment