Trending News

எய்ட்ஸ் பரப்பும் துறவிகளிடம் மன்னிப்பு கேட்க தான் தயாராக இல்லை -ரஞ்சன் (video)

(UTVNEWS | COLOMBO) -அப்பாவி சிறிய துறவிகளுக்கு எய்ட்ஸ் இனை பரப்பும் துறவிகளிடம் மன்னிப்பு கேட்க தான் தயாராக இல்லை என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நான் தேரர்களை இழிவுபடுத்தும் விதத்தில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதால் மன்னிப்பு கேட்பதற்கான எந்த தேவையும் இல்லை என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை நேற்று(17) மாலை சந்தித்து பேசியிருந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

மகா சங்கத்தினருக்கு தலைவணங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் பணமோசடி, கஞ்சா, போதைப் பொருள், அப்பாவி சிறிய துறவிகளுக்கு எய்ட்ஸ் இனை பரப்பும் துறவிகளிடம் மன்னிப்பு கேட்க தான் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Ranil says he continues to be the Premier under Sajith

Mohamed Dilsad

“Sri Lanka endorses CPEC,” says President

Mohamed Dilsad

ரோகித்தை மீண்டும் தவிர்த்த கோலி: வீரர்களின் புகைப்படங்கள் சொல்வதென்ன?(photo)

Mohamed Dilsad

Leave a Comment