Trending News

எங்கள் கிரிக்கெட் வாழ்வு அல்ப அயுளில் முடிந்து விட்டது -சிகந்தர் ரஸா

(UTVNEWS | COLOMBO) -எங்கள் கிரிக்கெட் வாழ்வு அல்ப அயுளில் முடிந்து விட்டது என ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் வீரர் சிகந்தர் ரஸா தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் அரசின் தலையீடு அளவுக்கதிகமாக இருந்ததால் அந்நாட்டு கிரிக்கெட்டுக்கு ஐசிசி தடை விதித்தது, இதனால் ஐசிசி தொடர்களில் அந்த அணி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து ஜிம்பாப்வே வீரர்கள் அனைவரும் விரக்தியும் வேதனையும் அடைந்துள்ளன.

இன்னிலையில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் வீரர் சிகந்தர் ரஸா “இப்போதைக்கு நாங்கள் இருதயம் உடைந்து போயுள்ளோம். இன்னமும் நாங்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. எங்கள் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு அல்ப அயுளில் முடிந்து விட்டதா என்று நினைக்கும் போது இருதயம் சுக்குநூறாகிறது. என்னால் இதனை ஜீரணிக்க முடியவில்லை. என தெரிவித்துள்ளார்.

Related posts

Bieber fans want UK tour cancellation

Mohamed Dilsad

தந்தையின் தாக்குதலில் 5 மாதக் குழந்தை பலி

Mohamed Dilsad

කුසල් 20-20 තරඟවල ශ්‍රී ලංකාවේ පළමු තැනට

Editor O

Leave a Comment