Trending News

வைத்தியர் ஷாபி பிணையில் விடுதலை

 

(UTVNEWS | COLOMBO) -குருணாகல் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை பிணையில் விடுதலை செய்ய குருணாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் 250,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா சரீர பிணைகள் நான்கின் அடிப்படையில் வைத்தியருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை,கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மக்கள் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவார்கள் என்பதினால் வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இருந்த போது, குறித்த வழக்கில் பயங்கரவாத அமைப்புக்களின் முன்னேற்றத்துக்கு நிதி உதவி செய்துள்ளதாக வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித முதலிகே நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அசாதாரண முறையில் சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

Related posts

மின்சாரம் தாக்கி பலி யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

Mohamed Dilsad

உடவளவை நீர்மட்டம் அதிகரிப்பு

Mohamed Dilsad

Marvel Studios plans a “Shang-Chi” movie

Mohamed Dilsad

Leave a Comment