Trending News

விஜய் சேதுபதியை வழிநடத்தவுள்ளார் முத்தையா முரளிதரனின்

(UTVNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது சவாலானது என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தற்போது, தான் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துவிட்டு, முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய் சேதுபதி. இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப் பட்டு, 2020ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடலாம் என இப்போதைக்கு படக்குழு தெரிவித்துள்ளது.

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கவுள்ளது தொடர்பாக விஜய் சேதுபதி கூறுகையில் “தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, சர்வதேச அளவில் முத்திரை பதித்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குச் சவாலாக இருக்கும். அதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

முரளியே இந்த படத்தில் இணைந்து பணியாற்றி, கிரிக்கெட் குறித்து என்னை வழிநடத்தவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு, முரளிதரனுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

தற்போது இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 2020ம் ஆண்டு இறுதியில் வெளியிடலாம் என இப் போதைக்கு முடிவு செய்துள்ளார்கள்.

Related posts

Aloysius and Palisena further remanded

Mohamed Dilsad

Three including teachers arrested for photographing ballot paper

Mohamed Dilsad

PSC term extended

Mohamed Dilsad

Leave a Comment