Trending News

இலங்கை – நியூசிலாந்து போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்

 

(UTVNEWS | COLOMBO) -இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம் பெறுவுள்ள இரு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு – 20 போட்டி தொடர் நடை பெறவுள்ள மைதானங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல் இரு இருபதுக்கு-20 போட்டிகளும் ஆர். பிரேமதாச மைதானத்தில் இருந்து மாற்றப்பட்டு மூன்று இருபதுக்கு-20 போட்டிகளும் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அடுத்த மாதம் 2ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மூலமாக தங்களுடைய டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பிக்கின்றது. அதேபோன்று, இலங்கை அணியும் குறித்த தொடர் மூலமாக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பிக்கின்றது. டெஸ்ட் தொடரின் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட் 8 – 10 – மூன்று நாள் போட்டி – மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானம், கட்டுநாயக்க
ஆகஸ்ட் 14 – 18 – முதலாவது டெஸ்ட் – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம்
ஆகஸ்ட் 22 – 26 – இரண்டாவது டெஸ்ட் – பீ. சரா ஓவல், கொழும்பு
ஆகஸ்ட் 29 – முதலாவது டி-20 போட்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி
செப்டெம்பர் 3 – இரண்டாவது டி-20 போட்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி
செப்டெம்பர் 6 – மூன்றாவது டி-20 போட்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி

Related posts

Fisheries Ministry provides over Rs. 440,000 to bring Sri Lankan fishermen back

Mohamed Dilsad

ලුණු ත් නෑ.

Editor O

ජාතික පාසල් 46ක විදුහල්පති තනතුරු පුරප්පාඩු සඳහා අයදුම්පත් කැඳවයි.

Editor O

Leave a Comment