Trending News

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் மொஹமட் சிராஸும் வாய்ப்பு

நியூசிலாந்து பயிற்சிப் போட்டியில் மொஹமட் சிராஸும் வாய்ப்பு

(UTVNEWS | COLOMBO) – நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று (8) ஆரம்பமாகவுள்ள மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டிக்கான 15 பேர்கொண்ட இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி இன்று கட்டுநாயக்க வியாபார சங்கம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக உலகக் கிண்ணத்துக்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கான குழாத்தில் இடம்பெற்றிருந்த மொஹமட் சிராஸும் நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டிக்கான குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குழாம் – அஷான் ப்ரியஞ்சன் (தலைவர்), தனுஷ்க குணதிலக, சதீர சமரவிக்கிரம, ஒஷத பெர்னாண்டோ, பெத்தும் நிஷ்ஷங்க, பானுக ராஜபக்ஷ, ஏஞ்சலோ பெரேரா, மினுத் பானுக, சாமிக கருணாரத்ன, அசித பெர்னாண்டோ, முஹம்மத் ஷிராஸ், ஜெப்ரி வெண்டர்சே, அமில அபோன்சு, வனிந்து ஹசரங்க, நிசல தாரக

Related posts

Salaries of Doctors, Nurses halted over absence after transfers

Mohamed Dilsad

“Tamil & Muslim citizens always backed the UNP” – Mangala

Mohamed Dilsad

UNP to nominate Sajith Premadasa as candidate on conditions

Mohamed Dilsad

Leave a Comment