Trending News

நிலவும் காலநிலையில் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

(UTVNEWS | COLOMBO) –   நாடளாவிய ரீதியில் மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோ மீற்றர் வரையும் அதிகரித்து வீசக்கூடும் எனவும் வடமத்திய மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையும் அதிகரித்து வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 – 75 மில்லி மீட்டர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேற்கு அரேபிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் அவ்வப்போது உயர் அலைகளுடனும் காணப்படும்.

மேற்கு அரேபிய கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என்பது மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

மன்னாரில் இருந்து புத்தளம் மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

புத்தளத்தில் இருந்து கொழும்பு வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Related posts

Three Indian Navy ships arrive at Trincomalee port

Mohamed Dilsad

69 kilos of Kerala cannabis detected in Vavuniya

Mohamed Dilsad

“Hamza Bin Laden is dead,” say US Officials

Mohamed Dilsad

Leave a Comment