Trending News

ஜப்பான் மீது தென்கொரியா அதிரடி

(UTVNEWS | COLOMBO) – வர்த்தகத்தில் முன்னுரிமை பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து ஜப்பானை தென்கொரியா நீக்கியுள்ளது.

ஜப்பான் மற்றும் தென்கொரியா இடையே வர்த்தக ரீதியிலான பிரச்சினை நீடிக்கிறது. தென்கொரியாவின் வர்த்தகத்தைக் கீழிறக்க ஜப்பான் அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. இதனை கண்டித்து தென்கொரியாவில் ஜப்பானுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.

இதுகுறித்து தென்கொரியாவின் வர்த்தக அமைச்சர் சங் யுன் மோ கூறுகையில் “எங்களது வர்த்தக முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 29 நாடுகளிலிருந்து ஜப்பானை நீக்குகிறோம். ஏற்றுமதிப் பொருட்களில் சர்வதேச வர்த்தக விதிமுறைகளை ஜப்பான் மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.

இதேவேளை, வர்த்தக முன்னுரிமைப் பட்டியலிலிருந்து ஜப்பான் நீக்கப்பட்டதற்கான முழுமையான விவரத்தை தென்கொரியா தெரிவிக்கவில்லை.

குறித்த ஜப்பானுக்கு எதிராக தென்கொரியா எடுத்துள்ள இந்த மாற்றங்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கொரியாவின் இந்த நடவடிக்கை தொடர்பாக ஜப்பான் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Related posts

ආනයනික මෝටර් රථ සඳහා ඇමරිකාව තීරු බදු ඉහළ දමයි

Editor O

Two youths held for attempted abduction

Mohamed Dilsad

Amarapura and Ramanya Buddhist chapters combined

Mohamed Dilsad

Leave a Comment