Trending News

மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று

(UTVNEWS|COLOMBO) – இந்தியா – மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றது.

தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள இந்திய அணி, இன்று போட்டியில் வெற்றி பெற்று இருபதுக்கு – 20 தொடரை போலவே ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்குகிறது.

இன்றைய போட்டியிலும் இலகுவான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந் நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

முன்பள்ளிகளுக்கு விடுமுறை…

Mohamed Dilsad

20000 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பிரதமர்!

Mohamed Dilsad

Sri Lanka migrant ship MV Sun Sea dismantled in Canada

Mohamed Dilsad

Leave a Comment