Trending News

முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று(18) இடம்பெறவுள்ளது.

இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமாயின், 10 விக்கட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில், 135 ஓட்டங்களை பெறவேண்டியுள்ளது.

268 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர நிறைவின் போது விக்கட் இழப்பின்றி 133 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றது.

நியூஸிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதையடுத்து, பதிலளித்தாடிவரும் இலங்கை அணியின் திமுத் கருணாரட்ன 71 ஓட்டங்களையும், லஹிரு திரிமன்னே 57 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதுள்ளனர்.

Related posts

Supreme Court to take up ‘Sathya Gaveshakayo’s petition in Sept.

Mohamed Dilsad

Tamil Nadu collects 40,000 books for Jaffna library

Mohamed Dilsad

கடும் வாகன நெரிசல்…

Mohamed Dilsad

Leave a Comment