Trending News

இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முன்னதாக இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றது.

நியூஸிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்படி 268 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 6 விக்கட்டுகளை இழந்த நிலையில் வெற்றியடைந்துள்ளது.

Related posts

News Hour | 06.30 am | 19.12.2017

Mohamed Dilsad

நவீன கையடக்க தொலைபேசி, உபகரணங்களுடன் மூவர் கைது

Mohamed Dilsad

பிரபல கிரிக்கட் வீரருக்கு 8 ஆண்டுகள் விளையாடத் தடை!

Mohamed Dilsad

Leave a Comment