Trending News

அநுரவுக்கு அலை திரண்டு ஆதரவு ; அப்படி என்ன தெரிவித்தார்

என் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்க மாட்டேன் என ஜனாதிபதி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை காலி முகத்திடலில் மக்கள் விடுதலை முன்னணி தலைமைத்துவத்தின் கீழ் உள்ள தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றாக வாழக்கூடிய மனித வளங்களின் ஊடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தான் எதிர்பார்ப்பதாகவும், இந்தப் போராட்டம் நிச்சயமாக வெற்றியில் முடியும் என்பதை தான் தெரிவிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

நாட்டினுள் சிறந்த அரசியலை கட்டி எழுப்புவதாக தான் மக்களுக்கு வாக்குறுதி அளிப்பதாகவும், நாட்டின் இளைஞர்களின் எண்ணங்கள் அடைப்படையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய திட்டங்களை தாங்கள் உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அனைவரும் மாற்றமடைய வேண்டும் எனவும் அதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

.

Mohamed Dilsad

Railways declared as an essential service

Mohamed Dilsad

ජනාධිපතිවරණයට 40ක් ඇප තියයි.

Editor O

Leave a Comment