Trending News

இலங்கை அணி பாகிஸ்தானில் டெஸ்ட் விளையாடாது – ஹரின்

(UTVNEWS | COLOMBO) -இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறாது என விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்தது. இன்னிலையிலேயே இந்த அறிவிப்பை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இவ்விரு அணிக்ளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் தொடர்கள் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மூன்று ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணியின் மீது கடந்த 2009ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர், முன்னணி டெஸ்ட் அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றன.

குறித்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானில் எந்தவொரு சர்வதேச டெஸ்ட் தொடரும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மாவட்ட மட்டத்தில் நல்லிணக்க குழுக்கள்

Mohamed Dilsad

Price of wheat flour increased by Rs. 5

Mohamed Dilsad

அமைச்சர் ரவியினால், பந்துலவுக்கு சவால்

Mohamed Dilsad

Leave a Comment