Trending News

அதிநவீன தொழில்நுட்ப துறையில் தெற்காசியா நாடுகளை விட இலங்கையே உயர்ந்த இடம் – அமைச்சர் ரிஷாட்

(UTVNEWS|COLOMBO) – ‘கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல், கூட்டுறவு மேம்பாடு, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரான ரிஷாட் பதியுதீன் தொழிற்பயிற்சித் துறையில் வெற்றிகரமாக தலைமைத்துவத்தினை தாங்கியதற்காக நாங்கள் அவரைப் பாராட்டுகிறோம்’என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஓறுகொடவத்தையில் கொரிய-இலங்கை தேசிய தொழில் பயிற்சி நிறுவனத்தின் அங்குரார்ப்பண வைபத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டுஉரையாற்றுகையிலேயே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இவ் வைபவத்தில் பிரதமர் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன,அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோகா, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதனா, மற்றும் இலங்கை தொழில் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் ரவி ஜெயவர்தன ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து இவ் வைபவத்தில் உரையாற்றுகையில்:

‘எங்கள் சவால்களை நாங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். நாம் நடுத்தரவருமானத்திலிருந்து உயர் வருமானம் பெறும் நாடாக முன்னேற வேண்டும். கொரியா-இலங்கை தேசிய தொழில் பயிற்சி நிறுவனமானது 26 மில்லியன் அமெரிக்க டொலர்பெறுமதியான இரண்டு கட்ட மேம்பாட்டு திட்டத்தில் முதல் கட்டமாக 17 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில்; கம்பாஹா தொழில்நுட்பக் கல்லூரியை மேம்படுத்துவதற்கான திட்டத்தினை நிறைவு செய்துள்ளது. கொரியா இந்த நிறுவனத்திற்கு பணத்தை மட்டுமல்ல, அதிநவீன தொழில்நுட்ப திறன்களையும் வழங்கியுள்ளது. இந்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் கொரியாவுக்கு நன்றி கூறுகிறோம்’ என்று பிரதமர் விக்ரமசிங்க கூறினார்.

கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் கொரியா பொருளாதார மேம்பாட்டுஒத்துழைப்பு நிதியத்தின் ஆதரவுடன் இந்த திட்டத்திற்கான நிதியானது கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து கடனாக பெறப்பட்டுள்ளது. அதிநவீன உலகளாவிய ஹைடெக்-ஆட்டோமேஷன் மற்றும் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம், நியூமேடிக் மற்றும் ஹைட்ரோலிக்ஸ், மற்றும் சிஎன்சி நிரலாக்கங்களுக்கான டிப்ளோமா நிலை 5 வரை (hi-tech-automation and robotics tech, pneumatic and hydrolics, and CNC programming – up to Diploma level 5) இலங்கையில் பயிற்சி அளிக்கும் ஒரேயொரு நிறுவனமாக கொரியா-இலங்கை தேசிய தொழில் பயிற்சி நிறுவனம் திகழ்கிறது. அண்மையில் கொரியா-இலங்கை தேசிய தொழில் பயிற்சி நிறுவனமானது 15 இலங்கை பயிற்றுவிப்பாளர்களுக்கு 10கொரிய நிபுணர்களால் பயிற்சியினை மேற்கொண்டது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் பதியுதீன், உலகளாவிய திறன் அட்டவணையில் இலங்கையின் நிலையை வலியுறுத்தினார். ‘எந்தவொரு நாட்டினதும் தொழில் பயிற்சி,திறன் மேம்பாடு மற்றும் தொழிலாளர் உற்பத்தித்திறன் ஆகியவற்றுக்குமிடையிலான வலுவான உறவை நாம் அனைவரும் அறிவோம். இவ்வாண்டும் திறனை பொறுத்தவரை உலகளாவிய தரவரிசையை இலங்கை மீண்டும் வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டது.

2019 குளோபல் டேலண்ட் போட்டித்திறன் குறியீட்டில், நாங்கள் 82 வது இடத்தில்உள்ளோம், எந்த மாற்றமும் இல்லாமல் 2017 முதல் அதே நிலையில் தொடர்கிறோம். இந்தியாவைத் தவிர, தெற்காசிய நாடுகளை விட இலங்கை உயர்ந்த இடத்தில் உள்ளது. இந்தமாறாத தரவரிசை நமது தேசிய திறன் மேம்பாட்டு முயற்சிகள் செயல்படுவதைக் காட்டுகிறது. உலகெங்கிலும், சேவை ஏற்றுமதியும் கடந்தசில ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதேபோல் இலங்கையின் சேவை ஏற்றுமதியும் வளர்ச்சியடைந்து வருகிறது. நல்ல திறன் பயிற்சி இந்த துறையும் வளர உதவும்;’என்றார் அமைச்சர் ரிஷாட். .

Related posts

அரச முகாமைத்துவ சேவையில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வருடத்தில் இணைப்பு

Mohamed Dilsad

Discussions between SLFP and SLPP were a success – Dayasiri Jayasekara

Mohamed Dilsad

Owner of collapsed building in Wellawatte arrested

Mohamed Dilsad

Leave a Comment