Trending News

இன்றைய தினமும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இன்றைய தினமும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மத்திய மலைநாடு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் காற்று நிலைமை அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீட்டர் அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

Kieran Powell recalled to West Indies Test squad

Mohamed Dilsad

මඩු දේවස්ථානයට පැමිණෙන වන්දනාකරුවන් ට නිවාස

Editor O

ஹட்டனில் ஐ.தே.க ஆதரவாளர்கள் பட்டாசுகொழுத்தி கொண்டாட்டம் …

Mohamed Dilsad

Leave a Comment