Trending News

சிலாபம் – குருநாகல் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் வைத்தியசாலையில்

(UTVNEWS|COLOMBO) – சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறி ஒன்றுடன் மகிழூர்தி ஒன்று மோதுண்டமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 65 வயதுடைய குருநாகல் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இந்த சமப்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் இடம்பெற்றுள்ள வாகன விபத்துக்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாணந்துரை,செட்டிக்குளம்,மொனராகலை,கேகாலை,குருநாகல் போன்ற இடங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

South African President stamps mark with Cabinet reshuffle

Mohamed Dilsad

ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை 30ம் திகதி

Mohamed Dilsad

புனித ரமழான் நோன்பு நாள் இன்று முதல் ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment