Trending News

தரமற்ற சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் நடவடிக்கை – கல்வி அமைச்சு

(UTVNEWS|COLOMBO) – பாடசாலைகளில் தரமற்ற வகையில் நடாத்திச் செல்லப்படும் சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

போஷாக்கு தொடர்பில் மாணவர்கள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த, ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், குறைந்த எடை மற்றும் இருதய நோய், நீரிழிவு, புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலை நடாத்தப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து சுற்றுநிருபம் ஒன்றை வௌியிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கணவரை மோசமாக விமர்சித்த பத்திரிக்கை ஆசிரியருக்கு மெலானியா டிரம்ப் கடும் கண்டனம்

Mohamed Dilsad

Bangladesh axe Soumya in further T20 overhaul

Mohamed Dilsad

இப்படி உடை அணிந்தது ஏன் என்ற சர்ச்சைக்கு ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா பதிலடி

Mohamed Dilsad

Leave a Comment